
பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; ஒருவர் பலி
கெக்கிராவ ஒலுகரந்த ரயில் கடவைக்கு அருகில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏ9 பிரதான வீதியில் கெக்கிராவ – ஒலுகரந்த ரயில் கடவையில் மற்றுமொரு வாகனத்தை முந்திச் சென்ற பஸ் ஒன்று அஜாக்கிரதையாக முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த தீபிகா பிரியதர்ஷனி (36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

