
போலியான வங்கி இணையதளம் மூலம் நிதி மோசடி ; இளைஞன் கைது
தனியார் வங்கியொன்றின் இணையத்தளத்தை ஒத்த போலியான இணையதளத்தை உருவாக்கி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர் பத்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில், நம்பகமான வங்கி இணையதளத்தைப் போன்ற தோற்றத்துடன் போலி தளத்தை உருவாக்கி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கணினி குற்றத் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
CATEGORIES Sri Lanka

