ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து டிம் குக் விலகல்

ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து டிம் குக் விலகல்

உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய நிர்வாக மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிம் குக் 2011ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள அவர், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளை ஜான் டெர்னஸ் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் தலைவராக பணியாற்றி வரும் ஜான் டெர்னஸ், புதிய சிஇஓவாக பதவியேற்க உள்ளதாக நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளின் மூலம் உலகளவில் பெரும் பயனாளர்களைக் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தில் இந்த தலைமை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )