
டயனா கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை மே மாதம் 12ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (21) அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதிமுதல் 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் ஏழு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

