கெக்கிராவவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கெக்கிராவவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (20) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதந்து காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )