புதையல் தோண்டிய இருவர் கைது

புதையல் தோண்டிய இருவர் கைது

குருநாகல் – பொல்பிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் 64 மற்றும் 65 வயதுடையவர்கள் எனவும், மா-எளிய மற்றும் பொல்பிதிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )