மொரட்டுவை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து

மொரட்டுவை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து

மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குத் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )