ஈரானில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஈரானில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்ற நிலை தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், ஈரானில் வர்த்தக விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தலைநகர் தெஹ்ரான் நகரின் பல்வேறு பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )