சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.04 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )