
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1800 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

