பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு

பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு

சாலையோர கடையில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உணவு விஷம் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடைய பானி பூரி விற்பனையாளர் தலைமறைவாகியுள்ளதால் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 18 பேரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கைகள் கிடைத்த பின்னர் சம்பவத்தின் உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் என சிவில் சர்ஜன் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )