அனுமதி இல்லா கட்டுமானங்களுக்கு எச்சரிக்கை ; நிந்தவூர் பிரதேச சபை அறிவிப்பு

அனுமதி இல்லா கட்டுமானங்களுக்கு எச்சரிக்கை ; நிந்தவூர் பிரதேச சபை அறிவிப்பு

நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும், வணிக நிலையங்கள், வீடுகள் மற்றும் பிற அபிவிருத்தித் திட்டங்களும், சபையின் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக, பிரதேசத்தில் உரிய அனுமதியின்றி பல கட்டிடங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை தொடர்பாக அயலவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தற்போது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைவரும், மேலும் எதிர்காலத்தில் எந்தவொரு திட்டத்தையும் ஆரம்பிக்க முனைவோரும், சட்டரீதியான அனுமதிகளைப் பெற்ற பின்னரே பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 52ஆம் பிரிவும், 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டமும் (1984ஆம் ஆண்டு 44ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டது) அமல்படுத்தப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறும் நடைமுறைகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு அலுவலக நாட்களில் நிந்தவூர் பிரதேச சபையை நேரடியாக அணுகுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )