
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 2 கைதிகள் தப்பிக்க முயற்சி – ஒருவர் காயம்
காலி சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முயன்ற போது, அங்குள்ள அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதிகளில் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

