
“யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்” ; இராமநாதன் அர்ச்சுனா எம்.பி
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது, இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், “கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்” என குறிப்பிட்டார்.
மேலும், தமிழக முதல்வராக குறிப்பிடப்படும் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், “அடக்கப்பட்ட தமிழன் என்ற ரீதியில் என் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்” எனவும் கூறினார்.
வட மாகாணத்தின் தீவுப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
கச்சத்தீவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அர்ச்சுனா எம்.பி.யின் இந்த கருத்து அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

