ஒஸ்மானிடம் இருந்து வெளியான தகவல்கள் – பத்மேயின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினார்

ஒஸ்மானிடம் இருந்து வெளியான தகவல்கள் – பத்மேயின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினார்

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மான் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மான்’ என்பவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் கறுப்புப் பணத்தை பணச் சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கைகள் அனைத்தையும் இலங்கையிலிருந்தவாறு இவரே முழுமையாக வழிநடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், கம்பஹா ஒஸ்மான் கடந்த 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் (Repeater) ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 02 தோட்டா மகசின்கள் (Ammo Magazines) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனடிப்படையில், சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மானை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த காலப்பகுதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரை மேலும் 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு நேற்று (16) பெற்றுக்கொண்டுள்ளது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கணேமுல்ல சஞ்சீவ கொலைக் வழக்கின் முக்கிய சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மேயுடன் அவர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், சமூகத்தையும் பொலிஸாரையும் திசைதிருப்பும் நோக்கில், தமக்கிடையே கடுமையான பகைமை இருப்பது போன்று அவர்கள் இருவரும் நீண்டகாலமாக காட்டி வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

கெஹெல்பத்தர பத்மேயிடமிருந்து கம்பஹா ஒஸ்மானுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை என புலனாய்வு அதிகாரிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

மேலும், பத்மேயின் ஆட்கள் சில சந்தர்ப்பங்களில் கம்பஹா ஒஸ்மானைக் கொலை செய்யத் தயாராக இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும், அவை அனைத்தும் வெறும் நாடகம் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பத்மேயின் கறுப்புப் பணத்தை இலங்கையிலிருந்தவாறு முழுமையாக பணச் சுத்திகரிப்பு செய்தது கம்பஹா ஒஸ்மான் தான் என்பதை புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபர் தனது வியாபாரங்கள் ஊடாக இந்த பணச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கெஹெல்பத்தர பத்மேயிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்திய விசாரணைகளின் போது இவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால், அண்மையில் அஸர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘படுவத்தே சாமர’ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மான் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

முக்கியமாக, கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக கம்பஹா ஒஸ்மானே துப்பாக்கியை வழங்கியுள்ளார் என்பதும் அங்கு தெரியவந்துள்ளது.

கொழும்பு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )