
பிரான்ஸ் கடுமையாக்கப்பட்ட புகைபிடித்தல் தடைச் சட்டங்கள்
நீண்டகாலமாக பிரான்ஸில் நிலவிவரும் புகைபிடிக்கும் தடைச் சட்டங்களை அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது,
நேற்று அறிவிக்கப்பட்ட புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் பாடசாலையை அண்மித்த இடங்கள் உட்பட பல இடங்களில் புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது .
பிரான்சில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள் , பஸ் நிறுத்தங்கள், அனைத்து பாடசாலைகள். குழந்தைகள் பொது இடங்களில் கூடும் இடங்களிலும் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சு சுகாதார அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு உணவகங்கள், பார்கள் மற்றும் பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டது . மேலும் சிகரெட்டுகளுக்கான வரிகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பிரான்சில் சிகரெட் பாக்கெட் ஒன்றின் சராசரி விலை சுமார் 12 யூரோக்கள் இலங்கை ரூபாயில் இதன் பெறுமதி சுமார் 4125 ரூபாய் .
ஐரோப்பாவில் அதிக புகைபிடிக்கும் நாடுகளில் ஒன்றான பிரான்சில் 30% க்கும் அதிகமான பெரியவர்கள் புகைபிடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .
பிரான்சில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழப்பதாகவும் , ஆண்டுக்கு 75,000க்கும் அதிகமாகும் எனவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்த புதிய தடையிலிருந்து மின்-சிகரெட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சைத் தவிர, பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் பொது இடங்களில் புகைபிடிக்கும் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன.
உணவகங்கள் மற்றும் கஃபேக்களின் வெளிப்புற பகுதிகளில் புகைபிடிப்பதைத் தடை செய்வதற்கான சட்டங்களையும் ஸ்பெயின் நாடு நடைமுறைப்படுத்த தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது .

