
மற்றுமொரு மீன்பிடி படகு விபத்து ஹிக்கடுவயில் சம்பவம்
ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
விபத்து நேற்று மதியம் இடம்பெற்ற போது குறித்த பல நாள் மீன்பிடிப் படகில் 06 மீனவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான மீனவர்களை அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர் எனவும் சம்பவத்தில் மீனவர்கள் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
விபத்துக்குள்ளான படகு சேதமடைந்துள்ளதாகவும் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Uncategorized

