
யாழில் 250 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது
250 கிலோ கிராம் கஞ்சா யாழ் காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர் .
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்தனர் .
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன .
CATEGORIES Sri Lanka

