
ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலைய தாக்குதல்: ஓமான் கடும் கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராகா அணுமின் நிலையத்தில் (Barakah Nuclear Energy Plant) தீ விபத்தை ஏற்படுத்திய ட்ரோன் தாக்குதலை ஓமான் கடுமையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓமான் வெளிவிவகார அமைச்சு, பிராந்தியத்தில் இடம்பெறும் “அனைத்து விரோத மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களையும்” தாம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பையும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஓமான் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் உருவாகியுள்ள சவால்களுக்கு தீர்வு காண உரையாடல் மற்றும் தூதரக அணுகுமுறைகளே அவசியம் எனவும் ஓமான் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், சர்வதேச சட்டங்கள், நல்ல அயல்நாட்டு உறவுகள் மற்றும் நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யாமை ஆகிய கொள்கைகளை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

