கொழும்பு – அவிசாவளை – ஹங்வெல்ல வரையான சில பகுதிகளில் வெள்ளம்

கொழும்பு – அவிசாவளை – ஹங்வெல்ல வரையான சில பகுதிகளில் வெள்ளம்

களனி கங்கை பள்ளத்தாக்குக்கு உட்பட்ட சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகளில் வீதிகளில் வெள்ள நீர் நிறைந்துள்ளது .

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய இடங்கள்:

புவக்பிட்டிய, தும்மோதர சந்தி (Puwakpitiya, Thummodara Junction)

சீதாவக்க தாவரவியல் பூங்கா (Seethawaka Botanical Garden) பகுதி

யட்டியாந்தோட்டை (Yatiyantota) பகுதியின் சில இடங்கள்

கடுவெல – பலும்மஹர வீதி: கடுவெல – பலும்மஹர புதிய கண்டி வீதியானது உடுப்பில (Udupila) ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

உடுப்பில பகுதியில் வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )