உலர்ந்த திராட்சையில் இறந்த பல்லி !
அம்பலங்கொடையில் கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்து வருகின்றது.