முகம் கழுவ சென்றவரை இழுத்து சென்ற முதலை

முகம் கழுவ சென்றவரை இழுத்து சென்ற முதலை

களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் முகம் கழுவச் சென்ற நபரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று (12) பதிவாகியுள்ளது. 

பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது, குறித்த நபரை முதலை ஒன்று திடீரென தாக்கி இழுத்துச் செல்வதை அவதானித்த நபரொருவர் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த இடத்திலிருந்து பயணப்பை ஒன்றும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரின் புகைப்படத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டையும், இரண்டு வங்கி வைப்பு புத்தகங்களும், கடவுச்சீட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )