
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

