கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி தொடர்பில் புதிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி தொடர்பில் புதிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொறு குற்றச்செயல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று கந்தானை பொலிஸ் பிரிவின் வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. 

இது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றவியல் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக் கொன்ற வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 27 வயதான சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்ற சந்தேக நபராவார். 

அவர் தற்போது 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றவியல் பிரிவால் விவாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)