வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவரை முகத்துவாரம் பொலிஸார் இன்று (09) கைது செய்துள்ளனர்.

முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதன்போது இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )