மின்சாரம் தாக்கி இருவர் பலி

மின்சாரம் தாக்கி இருவர் பலி

பொல்கஹவெல பொலிஸ் பிரிவின் பங்கலாவத்தை பகுதியில் நேற்று (06) பிற்பகல் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் எஹெலியகொட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வனவிலங்குகளிடமிருந்து விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )