
ரூபவாஹினி முன்னாள் தலைவர், பணிப்பாளர் கைது
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்க ஆகியோர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு வெளியே ஆறு ஊழியர்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சேர்க்கப்பட்டு, அவர்கள் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூலமாக வழங்கப்பட்டதால், அரசாங்கத்திற்கு ரூ. 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

