
ஜேவிபியின் சர்வதிகாரம் தொடர்கிறது
ஜேவிபியின் சர்வதிகாரம் தொடர்கிறது தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகிரிப்பு இருந்த போதும் தமிழ் மக்கள் கூட்டணி துவண்டு விடாது சீறிப்பாயும் எனவும் யாழ் மாநகர சபையில் தமிழ் கட்சி ஒன்றுக்கு எமது ஆதரவு நிச்சயம் இருக்கும் எனவும் சட்டத்தரணி விஸ்வ லிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அலுவைகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வருகின்ற மாதம் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருகின்றது வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்து நான்கு பிரதேசங்களில் யாழ் மாநகரசபையில் ஒரு வேட்பாளர் அத்தாட்சி படுத்தல் பத்திரத்தில் ஒரு வேட்பாளர் சத்திய பிரமாண ஆணையாளரின் உறுதிப்படுத்தல் இன்றி நிராகரிக்கப்பட்டது.
மேலும் மூன்று சபைகளில் இளம் வேட்பாளர் போதாமை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இது அடிப்படை மனித உரிமைகள் மீறல் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்தோம்.
ஆனால் நீதிமன்று அதனை தள்ளுபடி செய்தது .ஆனால் இதே காரணங்களுக்காக பிறப்பு அத்தாட்சிபடுத்தல் பத்திர உறுதிபடுத்த முடியாத காரணத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்று கொள்ளுமாறு ஏனைய தரப்புக்களுக்கு உத்தரவு வழங்கியது .
இலங்கை தேர்தல் திணைக்களத்தினால் ஒரு நீதிமன்று மற்றைய நீதிமன்றுக்கு முரனாக இருந்தது .சட்ட சிக்கல்களை உருவாக்கியது .வழக்கு தாக்கல் செய்பவருக்கு மாத்திரமே தீர்வு என்ற போர்வையில் காரணங்கள் இருந்தது.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சொன்னது போல ஏப்ரல் 20 முன்னர் வழக்கு தாக்கல் செய்ய கூறினார்கள் .நாங்கள் இதற்காக பல லட்சங்களை செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்று ஒரு தீர்வை வழங்கினால் அது அனைவருக்கும் பொருந்தும் என தெரிந்தும் எம்மை வழக்கு தாக்கல் செய்ய வைத்து நீங்கள் காலதாமதமாகி விட்டது என கூறி எதிருங்கள் என மறைமுகமாக ஜனநாயகத்தை எள்ளி நகையாடி நடைபெறும் தேர்தல் இதுவாகும் . சிஸ்டம் சேஞ் என்றார்கள் ஆனால் ஜனநாயகம் புதைக்கின்றார்கள் .
ஜேவிபியின் முன்னர் கருதப்பட்ட மாக்சிச லெனினிச கொள்கைகள் உடைய ரஷ்யா ,சீனா ,கியூபா என இடது சாரிகள் இருகின்ற நாடுகளை போல மிக ஜனாநாயக விரோதமாக செயற்படுகின்றது.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக தேர்தல்களை இல்லாது செய்கின்ற சூழலும் ஏற்படும் . ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் இந்த தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஊழல் பொருளாதார மீட்சி. கூறி இவ்வாறான தரப்புக்களை ஜேவிபியை மண்ணிலே வேரூன்ற விடாது பொறுப்புடன் செயற்படவேண்டும்.
எங்களுடைய மாநகர சபை நாம் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டோம். ஆகவே இங்கே மாநகர மக்களின் வாக்குரிமையும் கேள்விக்குள்ளானது .
யாழ்ப்பாணம்,வவுனியா ,மன்னாரில் நாம் ஜனநாயகரீதியாக போட்டியிட்டு வருகின்றோம்.
இளமையான துடிப்பான நேர்மையான எமது இளம் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
சதி நடவடிக்கைகளுக்குள் சிக்குண்டாது நாம் பல அடி தாண்டி பாய்வோம் .நாம் ஏனைய சபைகளில் கைப்பற்றுவோம் . நல்லூர் பிரதேச சபை காரைநகர் பிரதேச சபையினனையும் கைப்பற்றுவோம் .
எங்களுடைய இருப்பினை நாம் தக்கவைப்போம் .மாநகர சபையில் இருவருடம் செய்த சேவைகளை ஏனைய சபைகளிலும் மேற்கொள்வோம் .ஏனைய கட்சிகள் தமிழ் தேசியத்துடன் இணையுமானால் நாம் எங்களுடைய ஆதரவினை குறித்து ஒரு கட்சிக்கு வழங்குவோம் .”என தெரிவித்துள்ளார்.
பிரதீபன்

