
அமைச்சர் விஜேபாலவை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி
அமைச்சர் விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்திருந்தமை குறிபிடத்தக்கது .
CATEGORIES Sri Lanka

