பாகிஸ்தானின் பயங்கரவாத இலக்குகள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவிக்கும்வேளை ,இந்தியா இன்று அதிகாலை பின்வாங்கியதாக பாகிஸ்தான் கூறுகிறது

பாகிஸ்தானின் பயங்கரவாத இலக்குகள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவிக்கும்வேளை ,இந்தியா இன்று அதிகாலை பின்வாங்கியதாக பாகிஸ்தான் கூறுகிறது

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்தது

ஒப்பரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் பயங்கரவாத இலக்குகள் அடையாளம் காணப்பட்டு தாக்குதல் நடத்தபட்டதாகவும் இந்தியா தெரிவித்தது ,

இதேவேளை ,கட்டுப்பாட்டுக் எல்லையில் பல இந்திய இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாகவும், 5 இந்திய ஜெட் விமானங்கள் மற்றும் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா பின்வாங்குவதற்கான அறிகுறியாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் வெள்ளைக் கொடியை அசைத்ததாக இன்று காலை 7:00 மணியளவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அதாவுல்லா தரார் கூறியுள்ளார்

இதேவேளை இந்த தாக்குதல்களில் இரு குழந்தைகள் உள்பட சுமார் 8 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )