
பிரசன்ன ரணவீரவுக்கு 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்
நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .
இந்த நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த போது
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

