ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு ; பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு

ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு ; பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடாக 31 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பிரதிவாதிகளிடமிருந்து பெறப்பட்ட நட்டஈட்டுத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதிவாதிகளிடமிருந்து வசூழிக்கப்பட்ட நட்டஈட்டிலிருந்து 99.78 சதவீதம் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தற்கொலைப் படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )