மினுவங்கொடையில் வீசிய பலத்த காற்றில் பாடசாலை உட்பட 30ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மினுவங்கொடையில் வீசிய பலத்த காற்றில் பாடசாலை உட்பட 30ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல, போதிபிஹிடுவல பகுதியில் இன்று (18) காலை 7.30அளவில் வீசிய பலத்த காற்றினால், அப்பகுதியில் உள்ள ஒரு கோயில், ஒரு பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

காற்றினால் அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் மரங்கள் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மினுவங்கொடை பிரதேச செயலாளர் தனுஜா ராஜகருணா, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ருவந்திலக ஜெயக்கொடி, வெயங்கொடை இராணுவ முகாமின் அதிகாரிகள், மினுவாங்கொடை போலீசை நிலைய அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குழுவும் சேதமடைந்த வீடுகளை பார்வையிட சென்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )