
எரிவாயு பற்றாக்குறை ஏற்படப் போவதாக பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம்எதிர் கட்சிகளுக்கு பதிலளித்த அமைச்சர் விஜித
நாட்டில் எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என அமைச்சர் விஜித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .
எரிவாயு குறித்து எதிர்க்கட்சிகள் சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.
எரிவாயு இறக்குமதிக்கான டெண்டர் செயல்முறை மூலம் ஒரு புதிய நிறுவனம் அறிமுகமாகியுள்ளதாகவும் , அந்த நிறுவனத்தின் முதல் எரிவாயு கப்பல் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதிய நிறுவனத்திற்கு எரிவாயு டெண்டரை வழங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படுமென இன்று காலை நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத் ,
“கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிவாயுவை வழங்கியது ஓமன் நிறுவனம்தான்.
ஓமன் நிறுவனத்தை விட சற்று குறைவான விலையில் ஒரு புதிய நிறுவனம் டெண்டருக்கு விண்ணப்பித்தது.
இதனடிப்படையில் டெண்டர் குழு அந்தப் புதிய நிறுவனத்துடன்
ஒப்பந்தம் கையெழுத்திட்டது .
தரத்தை ஆய்வு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் முதல் கப்பல் இலங்கைக்கு வரும். எனவே எரிவாயு பற்றாக்குறை இருக்காது.
பொய்யான அச்சத்தை பரப்ப வேண்டாம். ஒரு நாடாக, நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம். அந்த உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது.” என அமைச்சர் விஜித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

