
கண்டி வத்தேகம கபரகல வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது
கண்டி வத்தேகம கபரகல வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது
அனர்த்தத்தின்போது இடம்பெற்ற நிலவெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த இந்த வீதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்தபோதும் நேற்று முதல் (17) பெய்துவருகின்ற கடும் மழைகாரணமாக மீண்டும் இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளது .
வத்தேகம – கபரகலை மற்றும் வத்தேகம ஊடாக – கோமரை, பம்பரல்லை, பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .
மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளை அறிவுறுத்துகின்றது.
அத்துடன் பன்விலை ,கபரகலை, மாத்தளை ,மடவளை ,கோமரை மடுல்கலை போன்ற பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல இடங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

