
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு 26 ஆம் திகதிஅரச மரியாதையுடன் நடைபெறும்
மறைந்த சிங்கள திரைப்பட நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி அரச மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர சதுக்கத்தில் உள்ள கலாசார விவகார அமைச்சில் நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் இன்று மாலை 5:00 மணிக்கு அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நடிகை மாலினி பொன்சேகா இன்று அதிகாலை காலமானார்.
CATEGORIES Sri Lanka

