
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேற்படி குறித்த தினங்களுக்கு பதிலாக 26 ஆம் திகதி (திங்கட்கிழமை) மற்றும் 27 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய தினங்களில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என்பதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை 26.05.2025 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

