
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்டுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (30) மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.
சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

