பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை சாதகமாக்கிய
216 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

பாக்கிஸ்தான் சிந்து மாகாணத்தில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட குறைந்த ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களின் போது அங்குள்ள மாலீர் மத்திய சிறைச்சாலையிலிருந்து கைதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இடத்துக்கு மாற்றபட்டபோது ஏற்பட்ட வன்முறைகளின்போது பல கைதிகள் சிறை கதவுகளை உடைத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

தப்பியோடியபோது போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கைதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் உறவினர்கள் பதற்றமடைந்தனர்.

தப்பியோடிய கைதிகளில் 78 பேரை போலீசார் மீண்டும் கைது செய்ததுடன் தலைமறைவான 135 கைதிகளில் பலர் பாரிய
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களென அந்நாட்டு சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர் .இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தப்பியோடிய கைதிகள் தானாக சரணடைந்தால் அவர்களுடைய தண்டனையை குறைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும் எனவும்
போலீசார் அவர்களை கைது செய்தால் பயங்கரவாத ஒழிப்பு சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ziya -உல் ஹசன் லஞ்சார் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )