
எம். பி தயாசிறியின் நடத்தை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகல்
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும் அவர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்கவுக்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு, கடந்த மே 20 ஆம் திகதி இந்த மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

