யாழ். தையிட்டி போராட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

யாழ். தையிட்டி போராட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இன்று யாழ். தையிட்டி பகுதியில் முன்னனெடுக்கப்பட்டபோராட்டத்தின் போது அங்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரை
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொசன் போயா தினமான இன்றைய தினத்திலும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்டபட்டுள்ளதுடன் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், இன்று காலை முதல் குறித்த இடத்தில் அதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக செயதியாளர்கள் தெரிவித்தனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )