பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும் போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்

பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும் போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்

கடந்த 2024/2025 பெரும் போகத்தில் விவசாயப் பாதிப்பிற்கு உட்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகமான விவசாயிகளுக்கு தற்போது இழப்பீடு வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள பகுதிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த தலைமையில் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்டது.

இதன் போது சுமார் 365 விவசாயிகளுக்கு காசோலை ஊடாக 12 மில்லியன் ரூபாய் நிதியை இழப்பீடாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் 2024/25 பெரும்போகத்தில் விவசாய பாதிப்புக்குள்ளான சுமார் 6,150 ஏக்கர் தொடர்பாக 3422 விவசாயிகளுக்காக மொத்த விவசாய பாதிப்புகளுக்கு 82 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )