
இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள்கம்பளையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது
இந்தியாவிற்கு சட்டவிரோதமாக படகில் சென்றவர்கள் கண்டி மாவட்டம் கம்பளையைச் சேர்ந்தவர்களென .தெரியவந்துள்ளது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று அதிகாலை வந்து இறங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண்டி மாவட்டம், கம்பளையைச் சேர்ந்த முஹம்மது கியாஸ்
(வயது 43), மனைவி பாத்திமா பர்ஹானா (வயது 34), முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா (வயது 4), அமிரா (வயது 4) ஆகிய ஐவரே இவ்வாறு படகில் இந்தியாவிற்கு பயணித்துள்ளனர் .
தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்றதாகவும் தற்போது திருப்பி செலுத்த முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாகவும் முஹம்மது கியாஸ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், 5 இலங்கை முஸ்லிம்களும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ஊடக செயதிகள் தெரிவிக்கின்றன .
2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

