
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 374 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 374 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 25,414 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 226 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 68 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 191 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 43 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

