
வற்றாப்பளை ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி
முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு
திரும்பிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது இன்று இந்த விபத்து .இடம்பெற்றுள்ளது .
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

