
அகமதாபாத் விமான விபத்து ; இங்கிலாந்து பிரதமர் இரங்கல்
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787-8 விமானம் சுமார் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி இன்று (12) விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில், விமான விபத்து காட்சிகள் வேதனையளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“பல இங்கிலாந்து மக்களை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குச் புறப்பட்ட விமானம் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகி வருவது மிகவும் வேதனையளிக்கிறது.
நிலைமை குறித்து தொடர்ந்து அறிந்து வருகிறேன். இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

