இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இஸ்ரேல் பிரதமருக்கும் இந்தியா பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இஸ்ரேல் பிரதமருக்கும் இந்தியா பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல், ஈரான் மீது நேற்று (13) அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாக ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” (Operation True Promise) என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது.

இன்று (14) அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (13) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுத்துரைத்தார். இதையடுத்து, பதற்றத்தை குறைத்து அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும்படி நெதன்யாகுவை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )