
ஈரானின் குடியிருப்பு வளாகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 60 பேர் பலி
ஈரானிய தலைநகரில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் பலியாகியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

