மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக காலநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை (புத்தளம், மன்னார் வழியாக) மற்றும் காலி முதல் பொத்துவில் வரை (ஹம்பாந்தோட்டை வழியாக) உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், அபாயகரமாகவும் காணப்படுகிறது.

அதனால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்களை கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )