யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றின் மூலம் தங்கம் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கடலில் குறித்த படகை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீட்கப்பட்ட தங்கம் மற்றும் தங்கம் கடத்த பயன்படுத்தப்பட்ட படகு ஆகியவை மேலதிக நடவடிக்கைக்காக இலங்கை சுங்கத்துறை காங்கேசன்துறை அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )